October 3, 2022

மகாத்மாக காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.5 லட்சம் கோடி செலவு: நிதியமைச்சர்

கமரெட்டி, செப்.3

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி மத்திய அரசு செலவிட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம், கமரெட்டி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தெலங்கானாவுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் மத்திய அரசு ரூ.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இத்திட்டத்துக்கான நிதி முறையாகச் செலவிடப்படவில்லை எனப் புகார்கள் கிடைக்கப் பெற்றாலோ அல்லது தணிக்கை அறிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஆய்வுக் குழுக்கள்அனுப்பிவைக்கப்படும். மாறாக, ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க இக்குழுக்கள் அனுப்பப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. குறைபாடுகளை சரிசெய்யவே ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்படுகின்றன என்றார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் இருந்தன. அவற்றை சரிசெய்துள்ள பிரதமா? நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேரடி பலன் பரிமாற்றம் மூலம் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

Spread the love