September 27, 2022

போட் நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்தது

போட் நிறுவனம் தற்போது அசத்தலான ஸ்டார்ம் ப்ரோ கால் எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் சிறப்பம்சங்களாவது: இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.78-இன்ச் புனிநுஸிசிம் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

மேலும், இந்த மாடலில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,2.5டி வளைந்த டிஸ்பிளே ஆதரவு, மெட்டாலிக் பாடி, இண்டர்சேன்ஜ் சிலிகான் ஸ்டிராப் போன்ற பல அட்டகாசமான வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆதரவு கொண்ட இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் அம்சத்தை வழங்குகிறது. மேலும் 700-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், 24×7 இதய துடிப்பு சென்சார், எஸ்பிஓ2 சென்சார், ஸ்லீப் மாணிட்டரிங் போன்ற தரமான வசதிகளுடன் வெளிவந்துள்ளது போட் ஸ்டார்ம் ப்ரோ கால் ஸ்மார்ட்வாட்ச். இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.3,799-ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பிளிப்கார்ட் மற்றும் போட் இணையதளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love