November 29, 2022

பொருளாதார ரீதியில் கடினமான காலம் தொடரும்
உலக நாடுகளுக்கு சவுதி எச்சரிக்கை

ரியாத், அக்.27

அடுத்த சில காலம் பொருளாதார அளவில் அரேபிய நாடுகளுக்கு நன்றாகவும், பிற நாடுகளுக்கு கடினமாக இருக்கும் என்று சவுதி நிதியமைச்சர் முகமது அல் ஜடான் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ரியாத்தின் முதன்மை முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் தெரிவித்திருப்பதாவது: அடுத்த ஆறு மாதங்கள்… ஏன் அடுத்த ஆறு வருடங்கள் பொருளாதார அளவில் அரேபிய நாடுகள் நன்றாக இருக்கும் என்றும், ஆனால், உலக அளவில் கடினமாக இருக்கும் என்றார். ஏனெனில், அதிகப்படியான வட்டி விகிதங்கள், பணவீக்கத்தால் உலக நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளன.

இந்நிலையில், அரபு நாடுகள் பிற நாடுகளுக்கு நிச்சயம் உதவும். குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளுக்கு எரிபொருள் ரீதியாகவும், உணவு ரீதியாகவும் நாங்கள் உதவுவோம். பிற நாடுகளுக்கு உதவுவது நமது கடமை. உலகளவில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கும், ஒத்துழைப்பு ஏற்படுவதற்கும் நாம் உறுதியாக உழைக்க வேண்டும், அதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்றார்.

மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாங்கள் பசுமையில்லா வாயுகள் வெளியேற்றத்தை குறைக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கிறோம். புதுப்பிக்க கூடிய ஆற்றங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றார்.

Spread the love