February 3, 2023

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசுப் பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு

சென்னை, ஜன.5

பொங்கல் விடுமுறையயாட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 1.62 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையயாட்டி பேருந்துகளில் முன்பதிவு கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவுப் பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிவிட்டன. இதையடுத்து ஜனவரி 12 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,749 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 6,183 பேருந்துகளும் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுவரை சென்னையிலிருந்து மட்டும் 1.62 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அரசுப் பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  மேலும் சிறப்புப் பேருந்துகளுக்கு நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம். கோயம்பேடு – 10, தாம்பரம் சானடோரியம் – 1, பூந்தமல்லி – 1 என 12 முன்பதிவு மையங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட 3 நாள்களில் 24×7 நேரமும் சென்னை இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள அதுகுறித்து புகார் அளிக்க 9445014450, 9445014436 ஆகிய இரண்டு அலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.

Spread the love