October 3, 2022

பேன்சி மொபைல் போன் எண் பெறுவதற்கான மின்னணு ஏலத்தில் பங்கு பெற பிஎஸ்என்எல் அழைப்பு

சென்னை, செப்.9

பிஎஸ்என்எல் பேன்சி மொபைல் போன் எண் பெறுவதற்கான, மின்னணு ஏலத்தில் பங்கு பெற, அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

தமிழக பிஎஸ்என்எல் வட்டம் சார்பில், பேன்சி மொபைல் போன் எண்கள், மின்னணு ஏல முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும், இந்த ஏலத்தில், பல்வேறு வகையிலான பேன்சி எண்கள் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பான மேல் விபரங்களை, www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தில், வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். பேன்சி எண்கள் ஏலம் எடுக்க, வரும் 14ம் தேதி கடைசி நாள்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love