September 27, 2022

பேண்டம் 210 நெக்பேண்ட் இயர்பட்ஸ் விங்ஸ் நிறுவனம் அறிமுகம்

மும்பை, செப்.20

மிகவும் பிரபலமான விங்ஸ் நிறுவனம் இந்தியாவில் பேண்டம் 210 எனும் பெயரில் புதிய நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதன் சிறப்பம்சங்களாவது:

இந்த புதிய இயர்பட்ஸ் ஆனது டூயல் பேரிங் 50 எம்எஸ் லேக்-ஃபிரீ ஆடியோ சின்க், 40 மணி பேட்டரி பேக்கப் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விங்ஸ் பேண்டம் 210 மாடல் ஆனது குறைந்த எடையுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. பின்பு இந்த இயர்பட்ஸ் ஐபிஎக்ஸ்5 கேசிங் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய இயர்பட்ஸ் மாடல் மென்மையான சிலிகான் மற்றும் ஏபிஎஸ் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இயர்பட்ஸ்-இன் இரு இயர்பட்களிலும் 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்ட்டுள்ளன. மேலும் இயர்போனில் எல்இடி ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் வி5.3 சிப் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த பேண்டம் 210 மாடல். புதிய விங்ஸ் பேண்டம் 210 நெக்பேண்ட் கேமிங் இயர்பட்ஸ் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. புதிய விங்ஸ் பேண்டம் 210 நெக்பேண்ட் கேமிங் இயர்பட்ஸ் மாடல் பிளாக், புளூ மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love