December 9, 2022

பேட்டபாளையம் ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், நவ.5

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பேட்டபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சிமன்ற அலுவலகம், துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் ஆய்வு செய்தார்.

மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பேட்டபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அங்கன்வாடி பணியாளர்களிடம் பரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார். அங்கன்வாடி மையத்தில் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களின் இருப்பு குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு எடை பார்க்கும் கருவி, 1 வயதிற்கு குறைவான குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிப்பதற்கான எடை பார்க்கும் கருவி ஆகியவை இருப்பதை பார்வையிட்டு உறுதி செய்தார். தற்போது மகப்பேறு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் விவரங்களையும், அவர்களுக்கு அரசு அறிவுறுத்தியபடி குறித்த கால இடைவெளியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதையும், தடுப்பூசி போட வேண்டிய குழந்தைகளின் விவரங்களையும் பதிவேடுகளை பார்வையிட்டு, செவிலியரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

பின்னர், கிராம நிர்வாக அலுவலகத்தில், ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஊராட்சிமன்ற அலுவலகத்தில்இ ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Spread the love