December 8, 2022

பேடிஎம் பங்குகள் விலை 11 சதம் வீழ்ச்சி

புது தில்லி, நவ.18

ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் நிறுவனம், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான, ஒன் 97 கம்யூனிகேசன் பங்குகளை விற்கும் முயற்சியில் களமிறங்கியதை அடுத்து, பங்குகள் விலை 11 சதம் சரிவைக் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சாப்ட்பேங்க் நிறுவனம், தன்வசம் உள்ள, ஒன்97 கம்யூனிகேசன் நிறுவனத்தின் 4.5 சத பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியை துவங்கியுள்ளது. இப்பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1,627 கோடியாகும். சாப்ட்பேங்க் வசம், ஒன்97 கம்யூனிகேசனின் 17.5 சத பங்குகள் உள்ளன. பேடிஎம் முதலீட்டாளர்கள், அப்பங்குகளை வர்த்தகம் செய்வதற்கான லாக் இன் பீரியட் முடிவுக்கு வந்த நிலையில், உடனடியாக பங்குகளை விற்க முன்வந்துள்ளது சாப்ட்பேங்க்.

இதையடுத்து, அண்மையில் இந்திய பங்குச் சந்தைகளில் ஒன்97 கம்யூனிகே­ன் நிறுவனத்தின் பங்குகள் விலை, 11 சதம் அளவுக்கு சரிவைக் கண்டன. ஒன்97 கம்யூனிகேசன் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்த போது, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பங்கு வெளியீட்டுக்கு பின், இந்நிறுவன பங்குகள் விலை, தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. கிட்டத்தட்ட ரூ.1,955 எனும் உச்சத்தை தொட்ட பங்கின் விலை, தற்போது ரூ.537க்கு சரிந்துள்ளது.

Spread the love