September 27, 2022

பெர்லின் சந்தையில் அறிமுகமானது டெக்னோ மொகபுக் டி1 லேப்டாப்

புது தில்லி, செப்.3

டெக்னோ நிறுவனம் தனது முதல் லேப்டாப் மாடலை பெர்லினில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக டெக்னோ மெகாபுக் டி1 எனும் பெயரில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களாவது: அதாவது 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த அட்டகாசமான லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

350 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியை கொண்டுள்ளது. அதேபோல் இந்த புதிய சாதனம் டிசி அடாப்டிவ் டிம்மிங் அம்சத்தையும் கொண்டுள்ளது.

10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-115ஜி7 பிராசஸர் வசதி உள்ளது. 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம்+ 1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 1.4 கிலோ எடை கொண்டது இந்த டெக்னோ லேப்டாப் மாடல்.

டிடிஎஸ் ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய லேப்டாப் சிறந்த ஆடியோ தரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஏஐ மற்றும் இஎன்சி இயக்கப்பட்ட டூயல் மைக்குகள் உள்ளன.

விண்டோஸ் 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடலில் கைரேகை ஸ்கேனர் வசதியும் உள்ளது. பின்பு புளூடூத் 5.0, பேக்லிட் கீபோர்டு, 2எம்பி வெப்கேம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. விரைவில் நாடுகளிலும் விரைவில் இந்த லேப்டாப் விற்பனைக்கு விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love