February 3, 2023

பெரம்பலூர் மாவட்டத்துக்கான ரூ.279.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அரியலூர், நவ.29

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.60 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.36 கோடி மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப்பணிகளுக்கு
அடிக்கல் நாட்டி, 9,602தி பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இன்றைய தினம் அரியலூரில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் முதல்வர், பெரம்பலூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அதன் விவரங்கள்:

சென்னை – கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின் கீழ் 209 கோடியே 08 லட்சம் ரூபாய் செலவில் துறையூர் -பெரம்பலூர் சாலையில் 30 கி.மீ. நீளத்திற்கு கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து, நக்கசேலம் மற்றும் குரும்பலூர் நகரப் பகுதிகளுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை: வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள், 1 ஆய்வுக்கூடம் மற்றும் 4 கழிப்பறைகள் கொண்ட கட்டடம், ஆலத்தூர் வட்டம், தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 62 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள், 1 ஆய்வுக்கூடம் மற்றும் 4 கழிப்பறைகள் கொண்ட கட்டடம், பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 64 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் மற்றும் 2 கழிப்பறைகள் கொண்ட கட்டடம்; வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புக் கட்டடம், குன்னம் வட்டம், மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையில் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக நலவாழ்வு மையம்: தொண்டப்பாடி, புஜங்கராயநல்லூர், கூத்தூர், மருவத்தூர், வெங்கனூர், நூத்தப்பூர், பொன்னாகரம், துங்கபுரம், சிறுகன்பூர் மற்றும்வயலூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 10 புதிய அலுவலகக் கட்டடங்கள்; பெரம்பலூர் வட்டம், லாடபுரம் கிராமத்தில் 1 கோடியே 14 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக் கட்டடம் மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 89 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டடங்கள்; குரும்பலூர்
பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 72 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலைகள் மற்றும் 31 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைகள், கழிவுநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம்,
அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் தெருவில் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைகள், லெப்பைகுடிகாடு பேரூராட்சிக்குட்பட்ட கிழக்கு சாலை முதல் மேற்கு சாலை வரை 72 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் மற்றும் வடிகாலுடன் கூடிய பேவர் பிளாக் சாலைகள்; என மொத்தம் 221 கோடியே 60 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின்
திறந்து வைத்தார்.

மேலும், இவ்விழாவில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் விவரங்கள்:

வேப்பந்தட்டை கிராமத்தில் 4 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டட கல்லூரி மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம் மற்றும் 4 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டட கல்லூரி மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம்; பெரம்பலூர், அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதுகலை விரிவாக்க மையம்; லெப்பைக்குடிகாடு கிராமத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வட்டார பொது சுகாதார மையக் கட்டடம், வேப்பூர் ஒன்றியம் – மருவத்தூர் கிராமத்திலும், ஆலத்தூர் ஒன்றியம் – ஆதனூர் கிராமத்திலும் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், பெரம்பலூர் ஒன்றியம் – செஞ்சேரி கிராமத்தில் 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட இப்ராஹிம் தெரு முதல் கடப்பக்குட்டை வரை மற்றும் கடம்பூரான் கோயில் தெரு முதல் பச்சமலை சாலை 2 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 3 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஒதியம், பெரியம்மாபாளையம், பொம்மனப்பாடி , சத்திரமனை, வேலூர், கூத்தூர், கண்ணப்பாடி, குரூர், மாவிலங்கை, தேனூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், அகரம், அயன்பேரையூர், தேவையூர், எறையூர், வி. களத்தூர், திருவாளந்துரை ஆகிய ஊராட்சிகளில் 9 கோடியே 85இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு, மின்மோட்டார் அறை மற்றும் வீடுகளுக்கு குடிநீர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள், கிராம குடிநீர் திட்டத்தின் கீழ் காரை, கீழமாத்தூர், எலந்தங்குழி, ஆதனூர், இராமலிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளில் 1 கோடியே 48 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் அறை, பைப்லைன் விஸ்தரிப்பு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள்: என மொத்தம் 31 கோடியே 37 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Spread the love