February 2, 2023

பென்ட்லீயின் புதிய கார் சந்தையில் அறிமுகம்

மும்பை, ஜன.21

சொகுசுக் கார் தயாரிப்பாளரான பென்ட்லீ நிறுவனம், ரூ.6 கோடி விலையில் தனது புத்தம் புதிய பென்ட்டேகா காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பென்ட்லீ கார்களை இந்தியாவில் சந்தைப்படுத்தி வரும் எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிகரிக்கப்பட்ட வீல்பேஸுடன் பென்ட்லீயின் புத்தம் புதிய பென்ட்டேகா காரை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன் விலை ரூ.6 கோடியாக (தில்லி காட்சியக விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தக் கார் முழுவதும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அதற்கு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் 7 முதல் 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 40 பென்ட்லீ கார்கள் விற்பனையாகின. அந்த விற்பனையை 40 சதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். அந்த வகையில், நடப்பு 2023ம் ஆண்டில் 60 பென்ட்லீ கார்களை இந்தியச் சந்தையில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார். மேலும், அந்த இலக்கை அடைவதற்காகவே புத்தம் புதிய பென்ட்டேகா கார் தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love