September 27, 2022

பெண்களுக்கான ஹெல்த் சப்ளிமென்ட் பொருட்களை டாடா குழுமம் அறிமுகம் செய்தது

மும்பை, செப்.14

டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல நுகர்வோர் பொருட்களைத் தயாரித்தும் விற்பனை செய்தும் வரும் நிலையில் தற்போது புதிதாக யஹல்த் சப்ளிமென்ட் துறையில் களமிறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில் ரீடைல் எப்எம்சிஜி வர்த்தகம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந் நிலையில் ரீடைல் சந்தையில் தனது முக்கிய வர்த்தகத் தளங்கள் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை நேரடியாகப் பெற்றுள்ள நிலையில் டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் எப்எம்சிஜி துறையில் நேரடியாக இறங்க முடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில் டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் ஹெல்த் சப்ளிமென்ட் பிரிவில் தாவர அடிப்படையிலான ப்ரோடீன் பவுடர்-ஐ அறிமுகம் செய்துள்ளது. டாடா கோஃபிட் என்ற பிராண்டின் கீழ் பெண்களுக்கான ஹெல்த் சப்ளிமென்ட் பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரையில் பிட்னஸ் மீதும், உடல் ஆரோக்கியத்தின் மீதும் அதிகப்படியான அக்கறை கொண்டு இருக்கும் வேளையில் இந்த பிராண்ட் பொருட்கள் குடல்-க்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத புரோபயாடிக் சப்ளிமென்ட் ஆக உள்ளது என டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் பேகேஜ் புட்ஸ் பிரிவின் தலைவர் தீபிகா பான் தெரிவித்துள்ளார்.

Spread the love