November 29, 2022

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 5ஜி பிளஸ் நெட்வொர்க்: ஏர்டெல் அறிமுகம்

பெங்களூரு, நவ.5

நாட்டின் பல பகுதிகளில் படிப்படியாக 5ஜி சர்விஸ் தொடங்கப்பட்டு வரும் நிலையில், ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையானது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட 8 நகரங்களில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினலில் 5ஜி செல் சைட்ஸ்களை பயன்படுத்தியுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் பரபரப்பான விமான நிலையமாக இருக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினல் முறையான திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள டெர்மினல் 2-ல் 5ஜி பிளஸ் சேவையை வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்து உள்ளது.

5ஜி ஸ்மார்ட் ஃபோன்களை கொண்ட அனைத்து ஏர்டெல் யூஸர்களும் தற்போதுள்ள டேட்டா பிளான்களை பயன்படுத்தியே அல்ட்ரா ஃபாஸ்ட் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும்.

தற்போதுள்ள ஏர்டெல் 4ஜி சிம்மிலேயே 5ஜி-யை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் என்பதால் 5ஜி சேவையை பெறுவதற்காக சிம்மை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இது குறித்து ஏர்டெல் நிறுவன உயரதிகாரியான ரந்தீப் செகோன் தெரிவிக்கையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் நவீன விமான நிலையத்தோடு இனி அதிநவீன ஏர்டெல் 5ஜி பிளஸ் சர்விஸை பயன்படுத்தி மகிழ்வார்கள். டெர்மினல் 2- ல் இருக்கும் போது ஏர்டெல் யூஸர்கள் எச்டி வீடியோவை தடையின்றி ஸ்ட்ரீமிங் செய்து பார்க்கலாம், கேமிங், மல்டிபிள் சேட் மற்றும் ஃபோட்டோ, வீடியோ அல்லது பிற விசயங்களை அதிவேகமாக அப்லோடிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Spread the love