February 3, 2023

பெங்களூரில் பிஒய்டி நிறுவனத்தின்
இரண்டாவது விற்பனை மையம் திறப்பு

பெங்களூரு, ஜன.7

பிஒய்டி மின்சார கார் நிறுவனம், பெங்களூரில், அதன் இரண்டாவது விற்பனை மையத்தை திறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விற்பனை மையம், மகாதேவபுராவில் உள்ள மென்பொருள் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்த விற்பனை மையத்தை பிபிஎஸ் மோட்டார்ஸ்’ நிறுவனம் நிர்வகிக்க உள்ளது. 4,300 சதுர அடி கொண்ட இந்த மையத்தை, கர்நாடக அமைச்சர் பைரதி பசவராஜ், பி.பி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் சங்வி மற்றும் பி.ஒய்.டி., நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சஞ்சய் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும், பிஒய்டி நிறுவனம், இந்த ஆண்டுக்குள் 53 விற்பனை மையங்களை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, அடுத்த வாரம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல தொழில்நுட்பங்கள் நிறைந்த கார்களை காட்சிப்படுத்த உள்ளதாகவும் இந்நிறுவன் தெரிவித்துள்ளது.

Spread the love