December 8, 2022

புனே தொழிற்சாலையில் 50000 நெக்சான் இவி வாகனத்தைத் தயாரித்து டாடா புதிய சாதனை

புனே, நவ.8

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டாடா பேசன்ஜர் எலக்ட்ரிக் மொபிலிட்டி தனது புனே தொழிற்சாலையில் 50000 நெக்சான் EV வாகனத்தைத் தயாரித்துப் புதிய சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: எந்த ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமும் இதுவரையில் 50000 எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்காத நிலையில் டாடா மோட்டார்ஸ்-ன் டாடா பேசன்ஜர் எலக்ட்ரிக் மொபிலிட்டி முதல் நிறுவனமான 50000 எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்துச் சாதனை படைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் தற்போது தனது எலக்ட்ரிக் கார்களுக்கு three-phased architecture முறையைப் பயன்படுத்தி வருகிறது. இந்தக் கட்டமைப்பில் அடுத்த 5 வருடத்தில் 10 எலக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடிய டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் தலைவரான என்.சந்திரசேகரன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தெரிவிக்கையில், 2018ல் எலக்ட்ரிக் வாகனத்தைத் தயாரிக்கும் திட்டத்தை ஒரு கனவு திட்டமாகத் துவங்கினோம், கடந்த 4 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு டாடா மோட்டார்ஸ்-ன் கோர் டீம் மற்றும் டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களின் உதவிகள் பெரிய அளவில் உதவியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டையும், விற்பனைகளையும் அதிகரிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிகப்படியான சலுகைகளை அளித்து வருகிறது. இதனால் டாடா மோட்டார்ஸ் அனைத்து எலர்க்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் பயன் பெறுகிறது.

Spread the love