October 4, 2022

புது ஏர்பாட்ஸ் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

புது தில்லி, செப்.8

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய ஆப்பிள் வயர்லெஸ் இயர்பட்ஸ் அதன் அளவுக்கு அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. புது இயர்பட்ஸ் தோற்றத்தில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் உள்புற அம்சங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ள எச்2 பிராசஸர் இருமடங்கு மேம்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ வசதிகளை வழங்குகிறது. இத்துடன் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பாடல்களை மாற்றுவது, வால்யும் அட்ஜஸ்ட் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 23ம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 26 ஆயிரத்து 900 ஆகும்.

Spread the love