September 27, 2022

புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்தது மிவி

சென்னை, செப்.13

மிவி நிறுவனம் இந்தியாவில் டுயோபாட்ஸ் எம்30 மற்றும் காலர் பிளாஷ் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு சாதனங்களும் மிவி நிறுவனத்தின் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும். மிவி டுயோபாட்ஸ் ஏ550, எப்70 மற்றும் காலர் கிளாசிக் ப்ரோ போன்ற மாடல்களும் அறிமுகமாகி இருக்கின்றன.

புதிய டுயோபாட்ஸ் மாடலில் உள்ள 10.5 எம்எம் டிரைவர்கள் தரமான சவுண்ட் வழங்குகிறது. இத்துடன் இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன. சார்ஜிங் கேசில் 380 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு 42 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

காலர் பிளாஷ் ப்ரோவில் உள்ள 13 எம்எம் டிரைவர் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. நெக்பேண்ட் 250 மணி நேரம் வரை ஆன் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் இயர்பட்களில் 190 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. காலர் உடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது. இரு இயர்போன்களிலும் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிஎன்சி நாய்ஸ் கேன்சலேசன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மிவி டுயோபாட்ஸ் எப் 30 மாடல்- பிளாக், புளூ, பெய்க் மற்றும் பின்க் வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக சலுகையாக ரூ. 999 விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. மிவி காலர் பிளாஷ் ப்ரோ மாடலும் ரூ. 999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த விலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின் இரு இயர்போன்களின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என மாறி விடும்.

Spread the love