February 3, 2023

புதிய 650சிசி மாடல்கள் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்ட் திட்டம்?

சென்னை, டிச.2

ராயல் என்பீல்டு நிறுவனம் 2018 வாக்கில் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 என இரு மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

தற்போது இரு மாடல்களும் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றன. இந்தியா மட்டும் இன்றி உலக சந்தைகளிலும் இந்த இரு மாடல்களும் அமோக வெற்றி பெற்றுள்ளன.

650 சிசி மாடல்கள் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் போட்டி மாடல்களை பின்னுக்குத் தள்ளி மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஏற்கனவே முன்னணியில் இருந்து வந்த பிரீமியம் பிராண்டுகளை முந்தியது. நல்ல வரவேற்பை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 650 சிசி பிரிவு வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த துவங்கியுள்ளது. இந்த வரிசையில் தான் புதிதாக சூப்பர் மீடியோர் 650 மாடலை ஃபிளாக்´ப் குரூயிசர் மாடலாக ராயல் என்பீல்டு அறிமுகம் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்து.

இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலின் விலை ரூ.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடல் விலை விவரங்கள் ஜனவரி மாத வாக்கில் அறிவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து வினியோகம் 2023 பிப்ரவரி மாத வாக்கில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love