November 28, 2022

புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார்
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிமுகம்

புது தில்லி, நவ.1

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயணத்தை துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் மாடல் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகளை கொண்டுள்ளது. மேலும், இந்த வாகனம் பாரம்பரியம் மிக்க பேண்டம் கூப் மாடலின் மேம்பட்ட வெர்சன் ஆகும். புதிய அலுமினியம் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலின் பேட்டரிகள், வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் மாடலை விட 30 சதம் உறுதியானதாக மாற்றி இருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் வழக்கப்படி ஸ்பெக்டர் மாடல் 700 கிலோ சவுண்ட் டெடனிங் பயன்படுத்துகிறது. இது காரின் தேவையற்ற சத்தத்தை காரினுள் கேட்க விடாமல் தடுக்கும்.

மேலும், இந்த எலெக்ட்ரிக் காரின் முழுமையான அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இறுதிக்கட்ட சோதனைகள் அடுத்த ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் 430 கிலோவாட் திறன் மற்றும் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். முழு சார்ஜ் செய்தால் இந்த கார் 520 கிலோமீட்டர் வரை செல்லும்.

Spread the love