December 9, 2022

புதிய வைப்பு நிதி திட்டம்
பரோடா வங்கி அறிமுகம் செய்தது

மும்பை, நவ.4

399 நாள்கள் பருவ காலம் கொண்ட திரங்கா ப்ளஸ் என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டத்தை பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து பரோடா வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் கீழ், வைப்பு நிதிகளுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். அத்துடன் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதமும் திரும்பப் பெற முடியாத வைப்புகளுக்கு கூடுதலாக 0.25 சதமும் வட்டி அளிக்கப்படும்.

இது குறித்து வங்கியின் செயல் இயக்குநர் அஜய் கே. குரானா தெரிவித்துள்ளதாவது: வட்டி விதிங்கள் உயர்ந்து வரும் இந்த சூழலில், வாடிக்கையாளர்களுக்கு வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் நோக்குடன் பரோடா திரங்கா ப்ளஸ் வைப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.

Spread the love