February 3, 2023

புதிய போல்ட் ரோவர் வாட்ச் சந்தையில் அறிமுகம்

மும்பை, டிச.26

ஆடியோ சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான போல்ட் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்களாவது:

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் எச்டி அமோல்ட் டிஸ்பிளே வசதியுடன் வௌவிந்துள்ளது. மேலும் 360×360பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்து. புதிய போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதய துடிப்பு சென்சார், எஸ்பிஓ2, ஸ்லீப், மென்ஸ்டுரல் சைக்கில் டிராக் செய்வது போன்ற பல அதிகமான உடல்நல அம்சங்களை வழங்குகிறது. பின்பு 100-க்கு அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபி68 வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது இந்த ரோவர் ஸ்மார்ட்வாட்ச்.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்வாட்ச் மாடலை முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் மியூசிக் பிளேபேக், வாய்ஸ் அசிஸ்டண்ஸ் மற்றும் போன் ஃபைண்டர் போன்ற அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச். ஏற்கனவே கூறியபடி இந்த போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் ஸ்விட்ச் மற்றும் ஃபிளிப் வெர்சன்களில் கிடைக்கிறது. பின்பு இதன் விலை ரூ.2,999-ஆக உள்ளது. குறிப்பாக போல்ட் ஆடியோ வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love