December 9, 2022

புதிய பிஒய்டி அட்டோ 3 இந்தியாவில் அறிமுகம்

புது தில்லி, நவ.16

சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான பிஒய்டி இந்திய சந்தையில் புதிய அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அட்டோ 3 மாடல் இந்திய சந்தையில் பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். பிஒய்டி அட்டோ 3 மாடல் பெளல்டர் கிரே, பார்க்கர் ரெட், ஸ்கை வைட் மற்றும் சர்ஃப் புளூ என நான்கு விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. 2021 ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்ட பிஒய்டி அட்டோ 3 மாடல் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்சனில் கிடைக்கிறது.

மேலும், இந்த காரில் பெரிய க்ரோம் கிரில், எல்இடி யஹட்லேம்ப்கள், டிஆர்எல்கள், ஸ்போர்ட் பம்ப்பர், 18 இன்ச் வீல்கள், பூட் லிட் மீது பிஒய்டி லோகோ இடம்பெற்று இருக்கிறது. ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் பெரிய வீல்பேஸ் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல் என்ற பெருமையை அட்டோ 3 பெற்றுள்ளது. மேலும், இந்த மாடலில் கீலெஸ் எண்ட்ரி, போர்டபில் கீ கார்டு, மல்டி-கலர் ஆம்பியண்ட் லைட்டிங், வித்தியாசமான வடிவங்களில் டேஷ்போர்டு, ஏசி வெண்ட்கள், டோர் ஹேண்டில் மற்றும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 12.8 இன்ச் டிஸ்ப்¼ள, நேவிகே­ன் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் கார்பி¼ள மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சேவைகளுக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய பிஒய்டி அட்டோ 3 மாடலில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. புதிய அட்டோ 3 மாடலை 7 கிலோவாட் ஹோம் சார்ஜர் மூலம் காரை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 9.5 முதல் 10 மணி நேரம் ஆகும். 80 கிலோவாட் டிசி சிசிஎஸ் 2 பாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்கள் ஆகும். புதிய பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி விலை ரூ.33,99,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Spread the love