February 2, 2023

புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது இன்னோவா கேப்டேப், புளூஜெட் யஹல்த்கேர்

புது தில்லி, ஜன.20

மருந்து துறையைச் சேர்ந்த இன்னோவா கேப்டேப், புளூஜெட் யஹல்த்கேர் ஆகிய இரு நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பங்கு வெளியீட்டின்போது, இன்னோவா கேப்டேப் நிறுவனம், ரூ.400 கோடிக்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் உள்ள 96 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு, கடனை அடைக்கவும், நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்கவும் பயன்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மும்பையை சேர்ந்த புளூ ஜெட் யஹல்த்கேர் நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது, புதிய பங்குகளை விற்பனை செய்யப்போவதில்லை என்றும்; முழுக்க முழுக்க நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 2.7 கோடி பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இவ்விரு நிறுவனங்களும், தங்கள் பங்குகளை, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிட உள்ளதாகத் தெரிவித்துள்ளன.

Spread the love