February 3, 2023

புதிய நெக்பேண்ட் இயர்பட்ஸ்: பிடிரான் அறிமுகம்

சென்னை, நவ.29

பிடிரான் பேஸ்பட்ஸ் என்ஒய்எக்ஸ் மாடலை தொடர்ந்து பிடிரான் நிறுவனம் புதிய நெக்பேண்ட் இயர்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய பிடிரான் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் தலைசிறந்த பேட்டரி பேக்கப் மற்றும் அழகிய டிசைன் கொண்டுள்ளது. அல்ட்ரா-ஃபிலெக்சிபில் ஃபிட், பவர்ஃபுல் பேஸ், நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

இந்த இயர்போனில் ட்ரூடாக் டிஎஸ்பி இஎன்சி காலிங் மற்றும் ஆப்ட்சென்ஸ் ரெட்யுஸ்டு லேடென்சி கேமிங் என இரண்டு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஆப்ட்சென்ஸ் அம்சம் கேமிங் செய்வோருக்கு ஏற்ற வகையில் அதிக உண்மைத்தன்மையான சவுண்ட் வழங்குவதோடு, 40 மில்லிசெகண்ட் வரை லோ லேடன்சி கொண்டுள்ளது.

இந்த நெக்பேண்ட் இயர்போன் ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் மற்றும் 10 மில்லிமீட்டர் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டிராங் பேஸ் கொண்டிருக்கிறது. இந்த இயர்போன்கள் பத்து நிமிட சார்ஜிங் செய்தால் ஏழு மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். பிடிரான் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் நெக்பேண்ட் இயர்போன் தற்போது ரூ. 599 எனும் சிறப்பு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் பிடிரான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

Spread the love