December 8, 2022

புதிய சூப்பர் மீடியோர் 650 அறிமுகம்
ராயல் என்பீல்டு நிறுவனம் தகவல்

புது தில்லி, நவ.9

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிடில் வெயிட் குரூயிசர், சூப்பர் மீடியோர் 650 மாடல் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 போன்ற மாடல்களை போன்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சூப்பர் மீடியோர் 650 மாடல் 1500எம்எம் அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதன் டிசைன் மீடியோர் 350 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

எனினும், இந்த மாடல் அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என இரண்டு வித வேரியண்ட்களில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் ஐந்து நிறங்களிலும், டூரர் மாடல் இரண்டு வித நிறங்களிலும் கிடைக்கிறது. இத்துடன் டூரர் மாடலில் ஏராளமான சவுகரிய வசதிகள், உயரமான விண்ட்-ஸ்கிரீன், பில்லியன் பேக்ரெஸ்ட், டூயல் சீட்கள், பேனியர்கள், டூரிங் ஹேண்டில்பார் மற்றும் பெரிய பூட்பெக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த மாடலிலும் 648சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 46.2 யஹச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 மாடலில் 19-16 இன்ச் அலாய் வீல்கள், 43துது அப்சைடு-டவுன் போர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320எம்எம் டிஸ்க், பின்புறத்தில் 300 எம்எம் ரோடோடார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேசன் சிஸ்டம், எல்இடி யஹட்லேம்ப், டெயில் லேம்ப் வழங்கப்பட்டிருக்கிறது.

Spread the love