January 22, 2023

புதிய சவுண்ட்பாரை அறிமுகம் செய்தது பிலிப்ஸ்

சென்னை, டிச.7

பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார், டிஏபி8947 மற்றும் டிஏபி7807 மாடல்களை அறிமுகம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய சவுண்ட்பார் சினிமாடிக் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள வயர்லெஸ் சப்-வூஃபர் அதிக பேஸ் கொண்டிருக்கிறது. இரு சவுண்ட்பார்களும் வயர்லெஸ் சப்-வூஃபர் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பிலிப்ஸ் டிஏபி 8947 சவுண்ட்பார் 3.1.2 சேனல்களை கொண்டிருப்பதால் எந்த விதமான அறையிலும் சவுண்ட்-ஐ முழுமையாக அதிக தெளிவாக கொண்டு சேர்க்க முடியும். இது 330 வாட்ஸ் பவர், 360 டிகிரி சரவுண்ட் எஃபெக்ட், டால்பி அட்மோஸ் சப்போர்ட், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் டிஏபி 7807 3.1 சேனல்கள் மற்றும் இரண்டு 8 இன்ச் சக்திவாய்ந்த சப்-வூஃபர்களை கொண்டுள்ளது.

இந்த சவுண்ட்பார் 3ம் சவுண்ட், 620 வாட்ஸ் பவர் அவுட்புட் மற்றும் ஆறு இண்டகிரேடெட் டிரைவர்களை கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் ஈசிலின்க் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் புதிய சவுண்ட்பார்கள் ஈக்வலைசர் மோட்கள், பேஸ், டிரெபில் மற்றும் வால்யூம் செட்டிங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இதன் டிஏபி 8947 மாடலின் விலை ரூ.35,990 என்றும் டிஏபி 7807 மாடல் விலை ரூ.28,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

Spread the love