December 9, 2022

புதிய கிராண்ட் செரோக்கியை
ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்தது

மும்பை, நவ.18

ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய கிராண்ட் செரோக்கி மாடலின் விலை ரூ.77 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாடலுக்கான முன்பதிவு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். புதிய 2022 ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிசன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த என்ஜின் 268 யஹச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் குவாட்ரா டிராக் ஐ 4×4 சிஸ்டம் மற்றும் ஸ்போர்ட், ஆட்டோ, ஸ்னோ மற்றும் சேண்ட்/மட் என நான்கு வித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.

உள்புறத்தில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டோன் இண்டீரியர், யஹட்ஸ்-அப் டிஸ்ப்¼ள, பவர்டு முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த பிரிவு வாகனங்களில் முதல் முறையாக 10.25 இன்ச் பேசன்ஜர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு 110 மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவுக்கு சிகேடி முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த காரின் வலதுபுற டிரைவ் யூனிட்கள் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

Spread the love