November 29, 2022

புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட அரசு கால்நடை மருந்தக கட்டிடத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்

விருதுநகர், அக்.29

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆனையூர் பகுதியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.40.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கால்நடை வளர்ப்போரின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:

கிராமப்பகுதிகளில் கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் அவர்களுக்கு தேவையான ஊக்கத்தை கொடுக்கும் வகையில் கிராமந்தோறும் கால்நடை மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு கால்நடைகளை பராமரிப்பது மட்டுமன்றி கால்நடைகளை வளர்ப்பதற்கும் பொதுமக்களிடையே ஆக்கத்தையும் ஊக்கமும் கால்நடை மருத்துவர் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கிராமப்பகுதிகளில் இணைத்தொழிலாக கறவைமாடுகள் ஆடுகள் வளர்ப்பது மூலம் பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றம் காணமுடிகின்றன. அந்த அளவிற்கு கால்நடைகள் பயன் அளிக்கின்றன. அதேபோல் கோழி வளர்ப்பின் மூலமும் வருவாய் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற முடிகின்றன. இதற்கு அடிப்படையாக கால்நடை மருத்துவமனை மிகப்பயனுள்ளதாக இருந்து வருவதால் அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி கால்நடைகள் வளர்த்து பயன்பெறலாம். அதற்கு அரசும் தேவையான திட்டங்களையும் தேவையான உதவிகளையும் செய்து வருகின்றன. எனவே பொதுமக்கள் கால்நடை வளர்ப்பில் சிறப்புக்கவனம் எடுத்து கால்நடைகள் வளர்த்து பயன்பெற வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.

Spread the love