December 9, 2022

பிளாக்‌ஷிப் கேமரா சென்சார்களுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன்

புது தில்லி, நவ.1

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது.

இது கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். முந்தைய பிக்சல் ஏ சீரிஸ் மாடலை விட இதன் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும். முன்னதாக பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் ஏ சீரிஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு பிக்சல் ஏ சீரிஸ் வெளியீட்டின் போதும் பிளாக்‌´ப் அம்சங்கள், தரம் மற்றும் அனுபவத்திற்கான இடைவெளியை குறைக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதே வழக்கம் பிக்சல் 4ஏ 5ஜி மாடலிலும் தொடர்ந்தது. பிக்சல் 4ஏ 5ஜி மாடலில் 90எர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பிரீமியம் மெட்டல் பாடி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 5ஏ மாடலிலும் தலைசிறந்த அம்சங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

பிக்சல் 6ஏ மாடலில் மட்டும் கேமரா சென்சார்கள் முந்தைய பிக்சல் 5ஏ மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டது. ஆண்ட்ராய்டு ஒபன் சோர்ஸ் கோட் விவரங்களில் கூகுள் நிறுவனம் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் லீனக்ஸ் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Spread the love