December 8, 2022

பில்லியன் டாலர் பிராண்டானது ஸ்பிரைட் கோக கோலா நிறுவனம் தகவல்

புது தில்லி, அக்.27

கோக கோலா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான, ஸ்பிரைட் இந்திய சந்தையில், அதன் ஆண்டு விற்பனையில், பில்லியன் டாலர் பிராண்டு’ ஆக, அதாவது, ரூ.8,200 கோடி பிராண்டாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் தங்களுடைய பிராண்டுகளில், ஆண்டு விற்பனையில், பில்லியன் டாலரை எட்டிப்பிடித்த இரண்டாவது பிராண்டாகும் ஸ்பிரைட் என கோக கோலா அறிவித்துள்ளது.

இதற்கு முன் தம்ஸ் அப் கடந்த 2021ல், பில்லியன் டாலர் பிராண்டாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளவில், குளிர் பானங்கள் வளர்ச்சி 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு இந்தியா, மெக்ஸிகோ, பிரேசில் ஆகிய நாடுகள் அதிக பங்களிப்பை வழங்கி உள்ளதாகவும் கோக கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love