December 8, 2022

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.13.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை, நவ.2

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள், மதுரை மாவட்டத்தில் 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், நாகப்பட்டினம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 கல்லூரி விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

2022-2023ஆம் ஆண்டிற்கான பிற்படு த்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கிடச் செய்ய, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகள் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை மாவட்டம், செக்கானூரனி, அரசு கள்ளர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி மாவட்டம், வெள்ளையம்மாள்புரம், அரசு கள்ளர் (இருபாலர்) மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று உண்டு உறைவிடப் பள்ளிகள்; மதுரை மாவட்டம், அய்யனார் குளம் மற்றும் கீரிப்பட் மு அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 5 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், கழிவறைகள் ஆகிய கட்டடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், வேவேதாரண்யத்தில் 3 கோடியே 13 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம் மற்றும் தருமபுரி மாவட்டம், செட்டிக்கரையில் 3 கோடியே 66 லட்சம் ரூபாய் இசலவில் கட்டப்பட்டுள்ள அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்; என டுமாத்தம் 13 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

Spread the love