January 22, 2023

பிராந்திய மொழி சேவைகளை
தொடர்ந்து மேம்படுத்தி சோமேட்டோ திட்டம்

பெங்களூரு, டிச.1

சோமேட்டோ நிறுவனத்தின் ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளைத் தற்போது ஆங்கிலம் மட்டும் அல்லாமல் தமிழ், ஹிந்தி, குஜராத்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம், பஞ்சாபி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வழங்கி வருகிறது. சோமேட்டோ நிறுவனம் தனது சேவை தளத்தில் ஆங்கிலத்தைத் தவிரப் பிற மொழிகளில் சேவை அளிப்பதன் வாயிலாக மட்டுமே ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 1,50,000 ஆர்டர்களைப் பெறுவதாகத் தெரிவித்துள்ளது.

இதை விட முக்கியமாகப் பிற மொழிகளைப் பயன்படுத்தும் சோமேட்டோ வாடிக்கையாளர்கள் மத்தியில் 54 சத வர்த்தகம் ஹிந்தி மொழியில் இருந்தும், 11 சதவீத வர்த்தகம் தமிழ் மொழியில் இருந்தும் வருவதாகச் சோமேட்டோ தெரிவித்துள்ளது.

மற்ற மொழி வாடிக்கையாளர்கள் மத்தியிலான வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் கிட்டத்தட்ட 60 சதத்திற்கும் அதிகமான வர்த்தகம் ஹிந்தி மற்றும் தமிழ் மொழி வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வருகிறது. சோமேட்டோ இந்தியாவில் சுமார் 1000 நகரங்களில் வர்த்தகம் செய்து வந்தாலும் பிராந்திய வாடிக்கையாளர்களை அடைவது சோமேட்டோவுக்குப் பெறும் சிக்கலாக உள்ளது, அப்படிப் பிடித்த வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து வர்த்தகத்தைப் பெறுவது என்பது கூடுதல் சுமையாக உள்ளது.

சோமேட்டோ நிறுவனத்திற்குத் தற்போது கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் சிறப்பானது, மேலும் பிராந்திய மொழி சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்திச் சரியான மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்கத் தொடர்ந்து முயற்சி செய்ய உள்ளோம் எனச் சோமேட்டோ நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும், தமிழ் மொழியிலும் சோமேட்டோ செயலியை பயன்படுத்துவோருக்கு வரும் நோட்டிபிகே­ன் இணைய உலகில் மிகவும் பிரபலமானது, சினிமா டயலாக் வாயிலாகவும், நகைச்சுவையாகவும், நேரத்திற்கு ஏற்ப வித்தியாசமான நோட்டிபிகேசன் அனுப்புவதன் மூலம் சோமேட்டோ அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

Spread the love