October 3, 2022

பிசிசிஐக்குப் புதிய விளம்பரதாரராக
மாஸ்டர்கார்டு நிறுவனம் தேர்வு

மும்பை, செப்.6

நாட்டில் அடுத்த ஒரு வருடத்துக்கு நடைபெறும் கிரிக்கெட் ஆட்டங்களின் விளம்பரதாரராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த 2019-ல் ரூ. 326.80 கோடிக்கு பேடிஎம் நிறுவனம், பிசிசிஐயின் விளம்பரதாரராகத் தேர்வானது. இந்த ஒப்பந்தம் 2023 வரை நீடிக்க இருந்தது. எனினும் கடந்த ஜூலையில் விளம்பரதாரருக்கான உரிமையை மாஸ்டர்கார்ட் நிறுவனத்துக்கு மாற்றி விடுமாறு பேடிஎம் கோரிக்கை விடுத்தது. அதன்படி பிசிசிஐ சார்பாக இந்தியாவில் நடைபெறும் ஆட்டங்களின் விளம்பரதாரராகத் தற்போது மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளது. இத்தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் 2022-23 பருவத்தில் நடைபெறும் சர்வதேச ஆட்டங்கள் (ஆடவர், மகளிர்), ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகள், பிசிசிஐ நடத்தும் ஜூனியர் போட்டிகள் ஆகியவற்றின் விளம்பரதாரராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் செயல்படவுள்ளது.

Spread the love