November 29, 2022

பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம்

மும்பை, நவ.15

கூகுள் நிறுவனம் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 7ஏ மாடல் “லின்க்ஸ் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பிக்சல் 7ஏ அதன் முந்தைய மாடல்- பிக்சல் 6ஏ-வை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி பிக்சல் 7ஏ மாடல் அதிக ரிப்ரெஷ் ரேட், புதிய டூயல் பிரைமரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. பிக்சல் 7A மாடலில் சாம்சங் பேனல், எப்எச்டி மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூசன், 90ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டூயல் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் கூகுள் டென்சார் சிப், குவால்காம் வைபை ப்ளூடூத் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் பிக்சல் 6ஏ மாடலில் அதிக மேம்பட்ட அம்சங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 6ஏ மாடலில் 90எர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட சாம்சங் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தாலும், ரிப்ரெஷ் ரேட் அளவு 60 எர்ட்ஸ் ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், புதிய பிக்சல் 7ஏ மாடலில் இதுபோன்ற சமரசம் செய்யப்படாது என்றே தெரிகிறது.

Spread the love