புது தில்லி, ஜன.20
மும்பை பங்குச் சந்தையின், சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான, எஸ்எம்இ தளத்தில், ஈஸ்டர்ன் லாஜிக்கா இன்போவே நிறுவனம், தன்னுடைய பங்குகளை பட்டியலிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் பிஎஸ்இல் எஸ்எம்இ தளத்தில் பட்டியலிடப்படும் 413 வது நிறுவனமாகும், இது.
இது குறித்து, மும்பை பங்குச் சந்தையின் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈஸ்டர்ன் லாஜிக்கா இன்போவே நிறுவனம், மும்பை பங்குச் சந்தையின் எஸ்.எம்.இ., தளத்தில் பட்டியலிடப்படும் 413வது நிறுவனமாகும். இதுவரை இந்த தளத்தில், மொத்தம் 412 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. இவை இந்த தளத்தின் வாயிலாக, ரூ.4,563 கோடியை திரட்டி உள்ளன.
மேலும், இந்நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, கடந்த 16ம் தேதி நிலவரப்படி ரூ.66,222 கோடி ரூபாயாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை பங்குச் சந்தை சிறு, நடுத்தர நிறுவனங்கள், அவற்றுக்குத் தேவையான நிதியை, பங்குச் சந்தை வாயிலாக திரட்டிக் கொள்ள வசதியாக, கடந்த 2012 மார்ச் மாதத்தில், இந்த பிரத்யேக எஸ்எம்இ தளத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.