November 29, 2022

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 ஸ்பெசல் எடிசன் இந்திய சந்தையில் அறிமுகம்

மும்பை, அக்.31

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எம் பிரிவின் 50 வது ஆண்டு விழாவை ஸ்பெசல் எடிசன் கார்களை வெளியிட்டு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், எக்ஸ்6 ஜாரெ எம் எடிசன் மாடலை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 ஜாரெ எம் எடிசன் விலை ரூ. 1 கோடியே 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

இது பிஎம்டபிள்யூ எக்ஸ் 6 ஸ்டாண்டர்டு எடிசனை விட ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் விலை அதிகம் ஆகும். ஜாரெ எம் எடிசன் சீரிசில் ஒன்பதாவது மாடலாக புதிய எக்ஸ் 6 அறிமுகமாகி இருக்கிறது. எக்ஸ் 6 ஜாரெ எம் எடிசன் மாடல் பிளாக் சபையர், னி கார்பன் பிளாக் வண்ணத்தில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி மாடலில் கிளாஸ் பிளாக் நிற முன்புற கிரில், 20-இனஅச் பிளாக் னி அலாய் வீல்கள், ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொனெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ லோகோ M டிரீட்மெண்ட் பெற்றுள்ளது. காரின் உள்புறம் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டெம்பரேச்சர் கண்ட்ரோல் வசதியுடன் கப் ஹோல்டர்கள், பவர்டு ஸ்போர்ட்ஸ் சீட்கள், சென்சாஃபின் இருக்கை மேற்கவர்கள், டகோரா ரெட் ஸ்டிச்சிங் போன்ற அம்சங்கள் உள்ளன. எம் ஸ்போர்ட் வெர்சனை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த காரில் எம் சார்ந்த அம்சங்களான னி லெதர் ஸ்டீரிங் வீல், எம் ஸ்போர்ட் பிரேக்குகள், எம் ஸ்போர்ட் எக்சாஸ்ட் சிஸ்டம், அடாப்டிவ் எம்சஸ்பென்சன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜினை பொருத்தவரை எவ்வித மாற்றமும் இன்றி 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 335 யஹச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிசன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

Spread the love