December 9, 2022

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 89 சதம் அதிகரிப்பு

புது தில்லி, நவ.1

நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 89 சதம் நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 2,145 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 89 சதம் அதிகமாகும். மேலும், இந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ஆண்டுக்கு 22 சதம் அதிகரித்து ரூ.34,527 கோடியாக உள்ளது.

மேலும், ஒவ்வொரு பயன்பாட்டாளரிடமிருந்தும் கிடைக்கும் சராசரி வருவாய் (ஏஆர்பியு) கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.153-ஆக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.190-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love