December 9, 2022

பாட்ஷா மசாலா-வை கைப்பற்றியது டாபர் நிறுவனம்

புது தில்லி, அக்.27

டாபர் நிறுவனம் ஆயுர்வேத பொருட்கள், ஹெல்த்கேர், ஹேர் கேர், ஸ்கின் கேபர், டூத்பேஸ்ட், ஹோம் கேர் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பொருட்களை மட்டுமே இதுவரையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. உணவு மற்றும் எப்எம்சிஜி துறையில் இருந்தாலும் மிகவும் குறைவான பொருட்களை மட்டுமே கொண்டு சிறிய வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில் மசாலா விற்பனையில் இறங்குவதற்காகப் பாட்ஷா மசாலா நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளைச் சுமார் 587.5 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில். பங்குகள் கைமாற்றம் மார்ச் 31, 2023க்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டாபர் நிறுவனம் பாட்ஷா மசாலா நிறுவனத்தின் 51 சதவீத பங்கு கைப்பற்றுதல், கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பங்குதாரர்கள் ஒப்பந்தத்தின்படி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே நடக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இது மட்டும் அல்லாமல் டாபர் நிறுவனம், பாட்ஷா மசாலா நிறுவனத்தின் 51 சத பங்கு தற்போது கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது போல், அடுத்த 5 வருடத்தில் மீதமுள்ள 49 சதவீத பங்குகளையும் கைப்பற்ற உள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பாட்ஷா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1152 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் மூலம் டாபர் நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் உணவு பிரிவில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வர்த்தகத்தை அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்தக் கைப்பற்றல் மூலம் டாபர் அதிகாரப்பூர்வமாக 25000 கோடி ரூபாய் மதிப்பிலான மசாலா சந்தையில் நுழைந்துள்ளது.

Spread the love