September 27, 2022

பழைய ஐபோன் விலையை உயர்த்திய ஆப்பிள்

புது தில்லி, செப்.12

சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ் 2022 மாடலை அறிமுகம் செய்தது. இதே மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் 2022 ஐபோன் எஸ்சி விலை ரூ. 43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஐபோன் எஸ்சி 2022 மாடல் விலையை ஆப்பிள் திடீரென உயர்த்தி இருக்கிறது.

இந்த விலை உயர்வு ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமான சில நாட்களிலேயே அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை உயர்வுக்கான காரணம் குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனினும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றமே காரணமாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் உற்பத்தி துவங்கி வினியோகம் வரை பல்வேறு கட்டணங்கள் மாறி இருப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறலாம். விலை உயர்வுக்கு முன் இந்திய சந்தையில் ஐபோன் ஐபோன் எஸ்சி 2022 (64, 128 மற்றும் 256 ஜிபி) மாடல்கள் விலை முறையே ரூ.43 ஆயிரத்து 990, ரூ. 48 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 58 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய விலை விவரம்: (64 ஜிபி) ரூ.49 ஆயிரத்து 990 (128 ஜிபி) ரூ. 54 ஆயிரத்து 900 (256 ஜிபி) ரூ. 64 ஆயிரத்து 900 ஆகும்.

Spread the love