December 8, 2022

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

நாமக்கல், நவ.18

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கொங்கு வேளாளர் சமுதாயகூடத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் 1922 விவசாயிகளுக்கு ரூ.19.38 கோடி வட்டியில்லா பயிர்க்கடனும், 260 பயனாளிகளுக்கு ரூ.3.22 கோடி மத்தியக்காலக் கடனும், 764 உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் 62 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.46 கோடி கடனும், 10 நபர்களுக்கு ரூ.40.00 லட்சம் தனிநபர் கடனும், 36 நபர்களுக்கு ரூ.21.00 லட்சத்திற்கு டாப்செட்கோ கடனும், 71 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38.00 லட்சம் மாற்றித்திறனாளிக்கான கடனும், 10 நபர்களுக்கு ரூ.3.00 லட்சத்திற்கு சிறுவணிகக் கடன் என மொத்தம் 3073 பயனாளிகளுக்கு ரூ.26.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியவர் ஸ்ரேயா பி.சிங், வழங்கினர். மேலும் சிறப்பாக செயல்பட்ட 69 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசுகளையும்இ பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தெரிவித்ததாவது: மற்ற வங்கிகளில் பிற மாவட்டங்கள்இ பிற மாநிலங்களைச் சேர்ந்த வங்கி அலுவலர்கள்இ பணியாளர்கள் பணியாற்றுவார்கள். கூட்டுறவு வங்கிகளில் மட்டும் தான் அந்த பகுதிகளைச் சேர்ந்த பணியாளர்கள் பணிபுரிகின்றார்கள். இதன் காரணமாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கு வங்கி சேவைகள் மிக எளிமையாக கிடைக்கின்றன. மேலும் அப்பகுதி மக்களின் தேவைக்கேற்ப பணியாற்றும் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவு அமைப்புகள் கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உள்ளனர். 2022 -23 நிதியாண்டில் தற்போது வரை நாமக்கல் கூட்டுறவுத்துறையின் மூலம் 24,679 விவசாயிகளுக்கு ரூ.238.87 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 6,935 பயனாளிகளுக்கு ரூ.47.39 கோடி கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

686 பயனாளிகளுக்கு ரூ.6.47 கோடி மத்திய காலகடன் வழங்கப்பட்டுள்ளது. 147 விவசாயிகளுக்கு ரூ.7.15 கோடி தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. 576 பயனாளிகளுக்கு ரூ.1.56 கோடி சிறு வணிககடன் வழங்கப்பட்டுள்ளது. 1,489 உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.17.35 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் கடன் 334 நபர்களுக்கு ரூ.1.73 கோடி வழங்கப்பட்டுள்ளது. டாம்கோ திட்டத்தின் கீழ் 94 நபர்களுக்கு ரூ.50.33 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. டாப்செட்கோ திட்டத்தின் கீழ் 257 நபர்களுக்கு ரூ.1.92 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டுறவு சங்கங்களை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Spread the love