December 9, 2022

பயங்கரவாதிகளின் கணக்கு விபரங்கள் அளிக்க
வங்கிகளுக்கு ஆர்பிஐ புதிய உத்தரவு

மும்பை, அக்.28

மத்திய அரசால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட, 10 பேர் தொடர்பான வங்கி கணக்கு விபரங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படி, அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர் – இ – தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 10 பேரை, மத்திய உள்துறை அமைச்சகம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக சமீபத்தில் அறிவித்தது. இவர்களில் சிலர் ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்; தற்போது பாகிஸ்தானில் உள்ளனர். இந்நிலையில், வங்கிகள் உட்பட அனைத்து நிதி தொடர்பான அமைப்புகளுக்கு, ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளோரின் பெயர்களில் துவக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள், முதலீடுகள் உள்ளிட்ட விபரங்களை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love