September 27, 2022

பண்டிகை காலத்தில் ரூ.96 ஆயிரம் கோடிக்கு ஆன்லைன் மூலம் விற்பனையாகும்: ரெட்சீர் தகவல்

மும்பை, செப்.9

நடப்பு ஆண்டு பண்டிகை காலத்தில், ஆன்லைன் வாயிலாக ரூ.96 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனையாகும் என ரெட்சீர் நிறுவனம் கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்த ரெட்சீர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அக்.4ல் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் வரிசையாக அணிவகுத்து வருகின்றன. மேலும், இந்த பண்டிகை காலத்தில் ஜவுளி, நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். அண்மை காலமாக மக்கள் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதை விட, ஆன்லைனில் வாங்குவதை மிகவும் விரும்புகின்றனர்.

இதனால், ஆன்லைன் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக்டோபர் முதல் வாரத்திலேயே ஆன்லைன் விற்பனை சூடு பிடிக்கும். கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு ரூ.96 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளது.

Spread the love