November 29, 2022

பணக்காரர்களுக்கு புதிய விசா திட்டம் இந்தோனேஷியா அறிமுகம் செய்தது

பாங்காக், அக்.26

வங்கிக்கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1 கோடி வைத்திருப்போருக்கு, 10 ஆண்டுகள் வரை தங்க அனுமதிக்கும் புதிய விசா திட்டத்தை இந்தோனே´யா அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனே´யா சுமார் 17 ஆயிரம் குட்டித்தீவுகளை கொண்ட நாடாகும். அங்குள்ள பாலி தீவு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோரை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், உலகளவில் பணக்கார சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக, 5 மற்றும் 10 ஆண்டுகள் வரையில் தங்க அனுமதிக்கும் செகண்ட் ஹோம் விசாக்களை, இந்தோனே´யா அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, 2 பில்லியன் ரூபியாக்களை (இந்திய மதிப்பில் ரூ.1.05 கோடி) வங்கி கணக்கில் வைத்திருப்போருக்கு 10 ஆண்டுகள் வரையில் தங்க அனுமதிக்கும் விசா வழங்கப்படுமென அறிவித்துள்ளது. புதிய விதிகள் கிறிஸ்துமஸ் அல்லது அறிவிப்பு வெளியான 60வது நாளில் இருந்து அமலுக்கு வருமெனவும் தெரிவித்துள்ளது.

‘இந்தோனே´யாவின் பொருளாதாரத்தில் நேர்மறையான பங்களிப்பை வழங்குவதற்காக வெளிநாட்டினருக்கு இது நிதியல்லாத ஊக்கத்தொகை என பாலி தீவில் நடந்த விழாவில் குடியுரிமை திட்ட செயல் இயக்குநர் ஜெனரல் விடோடோ தெரிவித்தார். இதன் மூலம் கோஸ்டாரிகா முதல் மெக்ஸிகோ வரை, தொழில்துறை வல்லுனர்கள், ஓய்வு பெற்றோர் மற்றும் வசதியுள்ள குடிமக்களுக்கு நீண்ட கால விசா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தோனே´யாவும் இணைந்துள்ளது. கோவிட் தொற்றுக்கு பின்னர், நீண்ட தொலைவுகளில் இருந்து பணிபுரியும் டிஜிட்டல் நாடோடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இது போன்ற நீண்ட காலம் தங்கி பணிபுரிய விரும்புவோருக்கான விசா தேவை அதிகரித்து வருகிறது. இந்தோனே´யா கடந்த 2021ல் டிஜிட்டல் நாடோடிகளுக்கு சில திட்டங்களை அறிவித்திருந்தது. புதிய விசாவினை அறிமுகப்படுத்தும் நேரத்தில், கருடா ஏர்லைன்ஸ் சர்வதேச விமானப்போக்குவரத்து சேவையை துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.

Spread the love