September 27, 2022

பட்ஜெட் விலையில் அறிமுகமானது
விவோ ஒய்22 ஸ்மார்ட்போன்

புது தில்லி, செப்.13

விவோ நிறுவனம் விவோ ஒய்22 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.

இதன் சிறப்பம்சங்களாவது: 6.55-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பி¼ள வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1612 பிக்சல்ஸ், 20:1:19 ஆஸ்பெக்ட் ரே´யோ, 60 யஹர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 530 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஃபன்டச் ஓஎஸ் 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3.5MM ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த விவோ Y22 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்டார்லிட் ப்ளூ மற்றும் மெட்டாவர்ஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love