October 4, 2022

பஜாஜ் ஆட்டோ விற்பனை 8 சதம் அதிகரிப்பு

மும்பை, செப்.2

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 8 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் 4,01,595 வாகனங்கள் விற்பனையாகின. கடந்த 2021ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,73,270-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 8 சதம் உயர்ந்துள்ளது. 2021 ஆகஸ்டில் 1,72,595 வாகனங்களாக இருந்த நிருவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை, கடந்த ஆகஸ்டில் 49 சதம் அதிகரித்து 2,56,755 வாகனங்களாக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 28 சதம் சரிந்து 1,44,840-ஆக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 2,00,675 வாகனங்களாக இருந்து. ஏற்றுமதி உள்பட இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை, கடந்த மாதத்தில் 5 சதம் அதிகரித்து 3,55,625-ஆக இருந்தது. 2021ம் ஆண்டின் இதே மாதத்தில் 3,38,310 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. ஆகஸ்ட் மாதத்தில் நிறுவன வர்த்தக வாகனங்களின் விற்பனை 31 சத வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் 34,960 வர்த்தக வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 45,970-ஆக உயர்ந்துள்ளது என்று பஜாஜ் நிறுவனம் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love