December 9, 2022

பங்கு வெளியீடு மூலம் ரூ.635 கோடி திரட்டுகிறது கீஸ்டோன் ரியல்டர்ஸ் நிறுவனம்

புது தில்லி, நவ.10

கீஸ்டோன் ரியல்டர்ஸ் நிறுவனம், நவ.14ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் பங்கு விலையை நிர்ணயித்து அறிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கீஸ்டோன் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 14ம் தேதி துவங்கி, 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பங்கின் விலையை ரூ.514ல் 541 என நிர்ணயித்து அறிவித்துள்ளது. துணிகர முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனை, 11ம் தேதியன்று துவங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும், இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, ரூ.635 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. துவக்கத்தில் ரூ.850 கோடியை திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது ரூ.635 கோடியாக குறைத்துக் கொண்டுள்ளது.

எஸ்பிஎப்சி பைனான்ஸ்: வங்கி சாரா நிதி நிறுவனமான எஸ்பிஎப்சி, பைனான்ஸ்’, ரூ.1,600 கோடி நிதியை திரட்டும் பொருட்டு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளது.

Spread the love