December 9, 2022

பங்கு வெளியீடு மூலம் ரூ.1200 கோடி
சாய் சில்க்ஸ் நிறுவனம் திரட்டுகிறது

புது தில்லி, நவ.16

கலாமந்திர், வரமஹாலட்சுமி சில்க்ஸ்’ உள்ளிட்ட பல வணிகங்களை நடத்தி வரும் சாய் சில்க்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சாய் சில்க்ஸ் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக ரூ.1,200 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பங்கு வெளியீட்டின்போது ரூ.600 கோடிக்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 18.04 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.

மேலும், திரட்டப்படும் நிதியை கொண்டு 25 புதிய ஸ்டோர்களையும், இரண்டு கிடங்குகளையும் அமைக்க உள்ளது. மேலும் நடைமுறை மூலதன தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் கலாமந்திர், வரமஹாலட்சுமி சில்க்ஸ், மந்திர், கே.எல்.எம்., பே­ன் மால் என நான்கு வகையில் வணிகத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love