October 3, 2022

பங்களாதேஷ்-க்கு மின்சார ஏற்றுமதி: அதானி பவர் திட்டம்

மும்பை, செப்.6

அதானி பவர் லிமிடெட் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள 1.6 ஜிகாவாட் அனல் மின் நிலையத்தை வைத்துள்ளது. இதில் இருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு ஏற்றுமதிக்கான பிரத்தியேக டிரான்ஸ்மிசன் லைன்-ஐ டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் செயல்படுத்த கெளதம் அதானி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கெளதம் அதானி அண்மையில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை தில்லி-யில் சந்தித்துப் பேசிய பிறகு ட்விட்டரில் அந்நாட்டுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் 1.6 ஜிகாவாட் அனல் மின் நிலையத்தில் இருந்து புதிய டிரான்ஸ்மிசன் லைன் மூலம் மின்சார ஏற்றுமதி செய்யப்படுவது குறித்துப் பதிவிட்டார்.

அதானி குழுமத்தின் துறைமுகம், இன்பராஸ்டக்சர் மற்றும் எனர்ஜி துறை வர்த்தகத்தை ஏற்கனவே இலங்கையில் விரிவாக்கம் செய்துள்ள நிலையில் தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

பங்களாதேஷ் மின்சார உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட புதை படிவ எரிபொருட்களை அதிகம் சார்ந்துள்ளது, மேலும் 2041 ஆம் ஆண்டளவில் அதன் மின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கி அதன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை ஆதரிப்பதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் ஜார்கண்ட் ஒன்றாகும், ஆனால் இப்பகுதியில் இருக்கும் அனல் மின் நிலையம் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைப் பயன்படுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2017 ஒப்புதல் ஆவணம் தெரிவிக்கிறது.

Spread the love