January 25, 2023

நோக்கியா டி21 டேப்லெட் சந்தையில் அறிமுகம்

மும்பை, ஜன.18

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா டி21 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நோக்கியா டி21 டேப்லெட் ஆனது 10.4-இன்ச் 2கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2000 மு 1200 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 360 நிட்ஸ் ப்ரைட்னஸ்,மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய நோக்கியா டி21 டேப்லெட் மாடல். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா டேப்லெட்.

இந்த மாடலில் 12என்எம் யுனிசோக் டைகர் டி610 சிப்செட் வசதி உள்ளது.

எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த நோக்கியா டி1 டேப்லெட் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். குறிப்பாக 8200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. நோக்கியா டி21 டேப்லெட் ஆனது கிரே நிறத்தில் கிடைக்கும். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் நோக்கியா டி21 டேப்லெட் வைஃபை மாடலின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. பின்பு இதன் எல்இடி + வைஃபை வேரியண்டின் விலை ரூ.18,999-ஆக உள்ளது.

Spread the love