December 9, 2022

நோக்கியா ஜி60 5ஜி சந்தையில் அறிமுகம்

சென்னை, நவ.9

எச்எம்டி கு¼ளாபல் நிறுவனம் நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது:

நோக்கியா ஜி60 5ஜி ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080×2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.

Spread the love